கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து, சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் வெள்ளி நீர் வீழ்ச்சி, அண்ணாசாலை, ஏரிசாலை, கலையரங்கம் பகுதி, நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.