வேலூரில் 4ஆவது நாளாக தொடர் கனமழை - rains continue for 4th day in vellore
வேலூர் மாவட்டத்தில் நான்காவது நாளாக கனமழை பெய்துவருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் 35 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. அதன்படி வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைகட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், நகரின் சில பகுதிகளில் பரவலான மிதமான மழையும் பெய்து வருகிறது. அதனால் மோர்தாண அணை, பொன்னை ஆறு ஆகியவைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.