சென்னையில் மழை: விழித்தெழுமா மாநில தலைநகர்...! - tiruvallur rain
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு (அக். 28) முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அண்ணா நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழை வெள்ளம் சூழ்ந்து அதிகம் பாதிக்கப்படும் மாநில தலைநகர் விழித்தெழுந்து விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருந்தால் நன்றே.