கொடைக்கானலில் காற்றுடன் கூடிய கனமழை! - Dindigul District News
திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அதிவேகமான காற்று வீசிவரும் நிலையில், அவ்வப்போது சாரல் மழையும் பெய்துவருகிறது. அதேபோல் இன்றும் ஏரிச்சாலை, கலையரங்கம், நாயுடுபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.