ஆம்பூரில் கொட்டித்தீர்க்கும் கன மழை! - விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தமிழ்நாடு- ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, மின்னூர், ஆம்பூர் வழியாக வேலூரை நோக்கி வரும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி பாசன வசதிக்கு ஏதுவாக அமைந்துள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.