திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி! - கனமழையால் மகிழ்ந்த பொதுமக்கள்
தமிழ்நாடு முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் இன்று (ஏப்.15) மதியம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுப் பகுதிகளான நத்தம், கோவில்பட்டி, வேலம்பட்டி, காந்திநகர், காமராஜர் நகர், தர்பார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 30 நிமிடங்கள் வரை பெய்த மழையினால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இன்று பெய்த மழையினால் வெப்பம் தணிர்ந்து, குளிர்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்சியடைந்தனர்.