தூத்துக்குடியில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி! - Tuticorin news
அக்னி வெயில் தொடங்கி சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வேளையில், தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதலே லேசான தூறலடித்து வந்தது. நேரம் கடந்து சடசடவென பெய்யத்தொடங்கிய மழை சுமார் அரை மணிநேரம் பெய்தது. இதனால் தெருக்களில் மழைதண்ணீர் தேங்கி ஓடியது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. தூத்துக்குடியில் திடீரென பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.முன்னதாக வங்கக்கடலில் உருவான வானிலை மாற்றம் காரணமாக தூத்துக்குடி, இராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.