ராமநாதபுரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை - மகிழ்ச்சியில் மக்கள் - ramanathapuram district news
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடுமையாக சிரமப்பட்டு வந்தனர். இதற்கிடையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், தற்போது பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், அபிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இம்மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.