புதுக்கோட்டையில் விடிய விடிய மழை... - கன மழை
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்றிலிருந்து இன்று அதிகாலை வரை மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைநீரில் சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலையில் ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே மழைக்காலங்களில் சாக்கடை உள்ளிட்ட கால்வாய்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் இந்த மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.