குமரியில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி! - குமரியில் திடீர் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பின. அதன் பின், கடந்த பத்து நாட்களாக காணப்பட்ட வெயிலால் வெப்பமான சூழல் நிலவியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி உள்பட ஆறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 27) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் இன்று பரவலாக கனமழை பெய்தது. மழையால் மக்களின் இயல்பு நிலை சற்று பாதிக்கப்பட்டாலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.