சென்னையில் கன மழை: மகிழ்ச்சியில் மக்கள்! - சென்னை
சென்னை: கோடைகாலம் தொடங்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் 15 மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்தது. இந்நிலையில், சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான அடையார், பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, வடபழனி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மக்களை வாட்டிவரும் கோடை வெயிலுக்கு, இதமாக பெய்த இந்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.