சென்னையில் தொடரும் மழை: பெருக்கடுத்து ஓடும் நீரால் வாகன ஓட்டிகள் சிரமம் - சென்னை மழை செய்தி
சென்னையில் நேற்றிரவு (டிச. 03) தொடங்கிய மழை சீரான இடைவெளியில் தொடர்ந்து பெய்துவருகின்றது. இதில் தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், நுங்கம்பாக்கம், திருவொற்றியூர் பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. இதனால் சென்னை போட் கிளப் சாலை, போயஸ் தோட்டம் போன்ற சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.