ஒருநாள் மழையில் ஒழிந்து போன சாலை... - v.Kaikatti area road damage
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே முனியன்குறிச்சி - பெரியதிருகோணம் சாலையின் அருகே உள்ள ஏரி முறையாக தூர்வாரப்படாததால் மழையின் காரணமாக சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது. ஏரி தூர்வாரும் பணியை மழைக்கு முன்னரே செய்வதற்கு மக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாததுதான் சாலை துண்டிப்புக்கு முழு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.