கனமழை எதிரொலி - 25ஆவது நாளாகத் தொடரும் தடை! - கோவை கனமழை
வட கிழக்கு பருவ மழை காரணமாகச் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்வதால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, அருவிக்குச் செல்ல அக்டோபர் 17ஆம் தேதி முதல் போளுவாம்பட்டி வனத்துறையினர் தடை விதித்தனர்.இந்நிலையில் நேற்று மாலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலை சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால்,கோவை குற்றாலத்தின் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.