சக்கராசனத்தில் கின்னஸ் சாதனை - கும்மிடிப்பூண்டி மாணவி அசத்தல் - கின்னஸ் சாதனை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கண்ணன் - கலாவதி தம்பதி. இவர்களது மகள் ஹோஷினி (15) பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி ஹோஹினி, கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், எட்டு ஆண்டுகளாக, யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர், நின்றபடி, உடலை பின் நோக்கி வளைத்து, கைகளை தரையில் வைக்கும் யோகாசனமான, சக்கராசனத்தில், தொடர்ந்து, 16 நிமிடம் 56 வினாடிகள் நின்று கின்னஸ் உலக சாதனை படைத்தார்.