நீலகிரியில் விளையும் பச்சை ஆப்பிள்: ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் கர்ப்பிணிகள்! - green apple season starts at may in nilgiris
நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பார்க் அருகேயுள்ள தோட்டக்கலைத்துறை பண்ணையில் பிளம்ஸ், பேரி, பீச், விக்கி, நாவல், பெர்சிமென், ஆரஞ்ச், பச்சை ஆப்பிள் உள்ளிட்ட நீலகிரிக்குரிய பழங்கள் விளைகின்றன. தற்போது ஊட்டி ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளது. இங்கு விளையும் ஆப்பிள், பச்சை நிறத்தில் இனிப்பு அதிகளவில் இல்லாமல் புளிப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். கர்ப்பிணிகள் இவற்றை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இதன் சீசன் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இம்முறை மே மாதத்திலேயே இந்தப் பச்சை ஆப்பிள் குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் காய்க்கத் தொடங்கியுள்ளது.