105 வயது ஆரோக்கிய வழிகாட்டி! - புதுக்கோட்டை அண்மை செய்திகள்
நூறாண்டுகளைக் கடந்து விட்டது வற்றிவிட்ட தேகத்தில் மட்டுமே தெரிகிறது, பொன்னம்மாள் பாட்டிக்கு. 105 வயதைக் கடந்து முதுவயது இளைஞியாக தள்ளாடாமல் நடைபோடும் பொன்னம்மாள் பாட்டியின் ஆரோக்கியத்தின் ரகசியம், அந்த கால உணவு முறைகளை இன்றும் கடைபிடித்து வருவதே... அந்தி கருக்கலுக்கு முன் இரவு சாப்பாடு, முன் தூங்கி, அதிகாலையில் முன் எழும் பொன்னம்மாள் பாட்டி இன்றைய இளம் தலைமுறையினருக்கான வாழ்க்கைக்கான வழிகாட்டியே...