அரசு ஊழியர்களை குண்டுகட்டாக தூக்கிய காவலர்கள்! - அரசு ஊழியர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்ற போலிசாரால் பரபரப்பு
நாகப்பட்டினம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், செவிலியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 7ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், 50க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கிச்சென்று வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.