சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது - வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்கிட வேண்டும், காலமுறை ஊதியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கம் சார்பில் 8ஆவது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.