முதலமைச்சரைப் பார்த்தது 'ரொம்ப ஹேப்பி' - சிறுமி ஜனனி - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட, சேலம் சிறுமி ஜனனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.27) ஸ்டான்லி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் முதலமைச்சர் தன்னை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி என சிறுமி தெரிவித்துள்ளார்.