காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் - ரஜினி ரசிகர்கள், பள்ளி குழந்தைகள் காந்தி சிலைக்கு மரியாதை - பொள்ளாச்சியில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
கோயம்புத்தூர்: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி சிலைக்கு பொள்ளாச்சி ரஜினி ரசிகர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அங்கு தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.