குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்- எஸ்.பி. கார்த்திக் - fourth book exhibition in ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்காவது புத்தக கண்காட்சி செய்தும்மாள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் அனைத்து அரங்குகளையும் பார்வையிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் வந்த பிறகு வெகுவாக குறைந்து வருகிறது. 8 வினாடிகளுக்கு மேல் ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனம் செலுத்த முடியாத சூழல் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் புத்தகம் வாசிப்பு பழக்கம் இல்லை என்பதுதான் காரணம். இதனால் தற்போது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டு வரவேண்டும்" எனத் தெரிவித்தார்.