கார் கதவில் கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் கடத்தல்: நான்கு பேர் கைது - கார் கதவில் கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் கடத்தல்
ஈரோடு: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு வந்த ஆம்னி காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆனால் காரில் எதும் கிடைக்கவில்லை. காரின் கதவுகள் சற்று வித்தியாசமாக இருந்ததால் அதனை காவல்துறையினர் சோதனையிட்ட போது, மதுபான பாக்கெட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரில் இருந்த நம்பியூரைச் சேர்ந்த சீனிவாசன், ஜாபர், ஜலில், கருப்புச்சாமி ஆகியோரை கைது செய்தனர்.