எழுவர் விடுதலையில் ஆளுநர் மௌனத்துக்கான காரணம் இதுதான்! - முன்னாள் சிபிஐ அலுவலர் - முருகன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் ஒரு வருடத்துக்கும் மேலாக ஆளுநர் இதில் மௌனம் சாதித்துவரும் நிலையில், ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்த முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் இது குறித்து சில முக்கிய தகவல்களை நமது ஈடிவி பாரத்துக்கு பகிர்ந்துள்ளார்.