சாலையில் சுற்றித்திரியும் யானையை விரட்டும் வனத்துறையினர் - காணொலி வெளியீடு! - வனத்துறையினர்
ஈரோடு மாவட்டத்தின் தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப்பகுதியான காராப்பள்ளத்தில் அதிகம் பாரம் ஏற்றிவரும் கரும்பு லாரிகளின் எடையைக் குறைப்பதற்காக, லாரி ஓட்டுநர்கள் கரும்பை சாலையில் தூக்கியெறிகின்றனர். இவ்வாறு வீசியெறியும் கரும்புகளை சாப்பிடுவதற்கு தினம்தோறும் யானைகள் வருவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலைகளில் சுற்றித்திரியும் யானைகளை வனத்துறையினர் மீண்டு காட்டுக்குள் விரட்டும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.