ஊருக்குள் புகுந்த முதலையைப் போராடி பிடித்த வனத்துறையினர்! - கடலூர் புவனகிரி அருகே ஊருக்குள் புகுந்த முதலையை போராடி பிடித்த வனத்துறையினர்
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தில், நள்ளிரவு இரண்டு மணியளவில் மாட்டைப் பிடிக்க முயன்ற முதலையைக் கண்டு அதிர்ந்த அதன் உரிமையாளர், அதனை விரட்டியதில் முதலை அருகில் இருந்த எள் மற்றும் மணிலா வயலில் இறங்கி ஓடி மறைந்தது. பின்னர் கிராம மக்கள் காவல் துறையினர் மற்றும் வனத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குக்காட்டிய சுமார் 300 கிலோ எடை, எட்டு அடி நீளம் கொண்ட ராட்சத முதலையை, பத்திரமாகப் பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி ஏரியில் விட கொண்டு சென்றனர்.