காட்டு யானையை தைரியமாக விரட்டிய வன ஊழியர்! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கடந்த வாரம் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திரன் தலைமையில் வன ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது ஸ்டான்மோர் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை வன ஊழியர் கோபி என்பவர் சத்தம் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டினார்.