மலைச்சரிவை கட்டுப்படுத்தும் காட்டுச் சூரியகாந்தி பூக்கள்! - நிலச்சரிவு
நீலகிரி: குன்னூர் மலைப்பாதையில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்படும் என்று அறிந்த ஆங்கிலேயர்கள் நூற்றாண்டுக்கு முன்பே நிலச்சரிவை தடுக்கும் வகையிலான மலைப் பாதைகளில் காட்டுச் சூரியகாந்தி பூக்களின் விதைகளை தூவி உள்ளனர். இந்த செடிகள் வறட்சி காலத்திலும் பூக்ககூடிய தன்மை உடையது குறிப்பாக இது மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன் நிலச்சரிவை கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பூக்களின் சீசன் அதிகரித்துள்ளது. கண்களுக்கு விருந்தளிக்கும் மஞ்சள் நிறத்தில் மலைப்பாதையில் பூத்துக்குலுங்கும் இப்பூக்களை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.