ஆட்கொல்லி யானையை பிடிப்பதில் சிக்கல் - ட்ரோன் மூலம் கண்காணிப்பு!
நீலகிரி: பந்தலூர் அருகே 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுவருவதால், ட்ரோன் கேமரா மூலம் யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆட்கொல்லி யானை நடமாட்டத்தைக் கண்டறிய அதன் வழித்தடத்தில் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் அதிலும் ஆட்கொல்லி யானை சிக்கவில்லை. இருப்பினும், ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆட்கொல்லி யானையை பிடிக்க 4 கும்கி யானைகளும் தயார் நிலையில் உள்ளன.