மாட்டுப் பொங்கல் அன்று மட்டுமே திறக்கப்படும் மலையடிவாரக் கோயில் - மண்ணுரு பொம்மைகளை நேர்த்திக்கடனாக செலுத்தும் விவசாயிகள்! - foothill temple is open only on the day of Mattu Pongal
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த கம்பத்ராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது நந்தீஸ்வரர் கோயில். ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று மட்டுமே திறக்கப்படும் இந்த கோயிலில், அன்று ஒருநாள் மட்டும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி விவசாயம் செழிக்கவும், காவல் நாய்கள், ஆடுகள் போன்ற கால்நடைகள் நோயின்றி வாழவும் 200 ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் செய்யப்பட்ட நந்தி சிலைக்கு பூஜை செய்து, விவசாயிகள் வழிபட்டனர். அத்துடன், மண்ணால் செய்யப்பட்ட மாடுகள், காவல் நாய்கள் போன்ற மண்ணுரு பொம்மைகளை கொண்டுவந்த மக்கள், அவற்றை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
TAGGED:
Erode News