திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - flooding at panchalinga falls
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் அதனையொட்டி உள்ள திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குளிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக் கொட்டாம்பாறை, குருமலை, ஈசல்திட்டு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.