மருத்துவமனையின் ஐசியு அறைக்குள் புகுந்த வெள்ளம்! - மருத்துவமனையின் ஐசியு அறைக்குள் புகுந்த வெள்ளம்
தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே நல்ல மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடையுடன் கனமழை பெய்தது. கொட்டித் தீர்த்த மழையால் ஜீடிமெட்லா (Jeedimetla) பகுதியில் உள்ள மல்லா ரெட்டி நாராயண மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.