பொன்னை ஆற்றோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - வேலூர் மாவட்ட செய்திகள்
தொடர் மழை காரணமாக பொன்னை அணைக்கட்டு நிரம்பி வருவதால் கிழக்கு, மேற்கு கால்வாய்கள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வேலூர் மாவட்டம், காட்பாடியில் பொன்னை ஆற்றின் கரையோரம் வாழும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.