கன்னியாகுமரியில் மீன்பிடித் தடைக்காலம்: கரை ஒதுக்கப்பட்ட விசைப்படகுகள்! - fishing banned from tomorrow at kanyakumari
தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்கிய மீன்பிடித் தடைக்காலம் ஜூன் மாதம் 15ஆம் தேதி முடிவடையவுள்ளது. இச்சூழலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபிக் கடல் பகுதிகளில் நாளை (ஜூன்.1) இரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்குகிறது. இதனால் குளச்சல், தேங்காய்பட்டணம் உள்பட குமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதிகளில், மீனவர்கள் விசைப்படகுகளை கரை ஒதுக்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை ஒதுக்கப்பட்டுள்ளன.