சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மலைப்பாம்புகள் குறித்த ஆராய்ச்சி வீடியோ! - இந்தியாவில் முதன் முறையாக
இந்தியாவில் முதன்முறையாகப் பாம்புகளுக்கு மயக்கமருந்து செலுத்தி உள் அறுவை சிகிச்சை செய்து ரேடியோ டிரான்ஸ்மிட்டர் பொருத்தி பாம்புகள் உயிரிழக்காமல் சிறப்பாகச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அசோகனுக்கு டெல்லியில் உள்ள இந்திய வன விலங்கு ஆராய்ச்சி மையம் இயக்குநர் ரமேஷ் பாராட்டியுள்ளார். பாம்புகள் மூன்று கிலோ மீட்டர் வரை சென்று இரை தேடும், மான், குரங்குகளை வேட்டையாடும். சில நேரங்களில் மரத்தடியில் நிற்கும் மனிதர்களைக் கூட விழுங்கிடும் தன்மைகொண்ட மலைப்பாம்பு, 40 வருடங்கள் உயிர் வாழக்கூடியது. இந்த அறுவை சிகிச்சையும், பாம்பைக் கண்காணிக்கும் நுட்பத்தையும் இந்த வீடியோவில் காணலாம்.