யானையை விரட்ட வீசிய பட்டாசால் கரும்பு தோட்டத்தில் தீ! - கோயம்புத்தூர் அண்மைச் செய்திகள்
கோவை சப்பானி மடை பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில், நேற்று (ஆக.4) புகுந்த இரண்டு காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது, காய்ந்த சோகைகள் மீது விழுந்த பட்டாசு வெடித்ததில், கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் வரும் முன்னர், பயிரிடப்பட்டிருந்த அனைத்து கரும்புகளும் தீயில் எரிந்து நாசமாகின.