கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - etv bharat
தூத்துக்குடி: கோவில்பட்டியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் இந்த விபத்தில் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, காவல் துறையினர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.