சமையல் எரிவாயு உயர்வைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் வினோத முறையில் வேட்பு மனு தாக்கல் - Bahujan Samaj Party files nomination
மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அக்கட்சி வேட்பாளர் என்.சம்சுதீன் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனை முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வேட்பாளர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். தொடர்ந்து, வேட்பாளர் சம்சுதீன் பெட்ரோல் விலையேற்றத்தை கண்டிக்கும் விதமாக இருசக்கர வாகன டயரை ஓட்டியவாறும், மாவட்ட மகளிரணி செயலாளர் சலாமத் நிஷா, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் விதமாக கையில் விறகு அடுப்பை சுமந்தும் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.