’எஸ்.எம்.ஏ குறைபாடு குழந்தைக்கு உதவி கேட்ட பெண் காவலர்’ - காணொலி வைரல்! - நாகப்பட்டினம் அண்மைச் செய்திகள்
தஞ்சாவூரில் 21 மாத பெண் குழந்தை ஒன்று எஸ்.எம்.ஏ (ஸ்பைனல் மஸ்குலர் அட்டாக்) என்ற முதுகுத்தண்டுவட தசைநார் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு உதவுமாறு நாகப்பட்டின மாவட்டத்தின் செம்பனார்கோயில் காவல்நிலைய முதுநிலை பெண் காவலர் எஸ்.அஸ்வினி பதிவிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.