கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு! - விவசாயிகள் கடன் தள்ளுபடி
தமிழ்நாடு முதலமைச்சர் கே பழனிச்சாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதன்மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கியுள்ள 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதையடுத்து, கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.