அதிமுக வசம் சேருமா கே.வி. குப்பம்? - பூவை ஜெகன் மூர்த்தி
புரட்சிப் பாரதம் கட்சியின் தலைவரான பூவை ஜெகன் மூர்த்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பாக கே.வி. குப்பம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், 2016ஆம் ஆண்டு அதிமுக கூட்டணிக்கு மாறி, பூந்தமல்லி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். தற்போது மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடும் இவர் வெற்றியைத் தன்வசமாக்குவாரா?