5,8ம் வகுப்பு பொதுத் தேர்வு வந்தால் குழந்தை தொழிலாளர் முறை அதிகரிக்கும் : முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி பேட்டி
"உலகில் எந்த நாட்டிலும் 5, 8ம் வகுப்பு தேர்வு என்பது கிடையாது. இதுபோன்று மாணவர்களை தோல்வி அடையச் செய்து மீண்டும் படிக்க கூறுவது என்பது ஏழை குழந்தைகளை பள்ளியில் இருந்து இடைநிற்றலை ஏற்படுத்துவதும் மட்டுமல்லாமல் குழந்தை தொழிலாளர்களை உருவாக்குவதும் ஆகும். இதனால் இங்குள்ள முதலாளிகள் குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களை பெறுவதற்கான வழிவகை ஏற்படுத்துவதுதான் என்று முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி பேட்டியளித்துள்ளார்.