எங்களுக்கு மிலிட்டரி கேண்டீன் வேணும் - கரூர் முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கை - Ex- army association
கரூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுபேதார் மோகன்தாஸ் தேசியக்கொடி ஏற்றினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் உலகநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் தலைவர் முருகேசன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மாவட்டத்தில் மிலிட்டரி கேண்டீன் மற்றும் இ.சி.ஹெச் மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.