தொகுதியில் உள்ள குழந்தைக்கு கூட என் பெயர் தெரியும்! - ஜெயக்குமார் - ராயபுரம் தொகுதி
சென்னை: ராயபுரம் தொகுதியில் உள்ள குழந்தைக்கும் என் பெயர் தெரியும் என்று கூறும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து 7 ஆவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுகிறார். பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பல தேவைகளை நிறைவேற்றியுள்ளதாகவும், தொகுதிக்கு புதிய தேவை ஏதுமில்லை என்றும் அவர் கூறுகிறார். வட சென்னையின் தோற்றத்தை மாற்ற பணிகள் நடைபெறுவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் தென் சென்னையை விட, வட சென்னை புதுப்பொலிவு பெறும் என்றும் தெரிவித்தார்.