சாலையில் கன்றுடன் நடந்துசென்ற காட்டு யானை: வாகன ஓட்டிகள் அச்சம் - erode district news
ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள வனச்சாலையில் இன்று (ஜூலை 10) அதிகாலை காட்டு யானை ஒன்று தனது கன்றுடன் சாலையின் நடுவே நடந்துசென்றது. காட்டு யானை கன்றுடன் இரவு நேரத்தில் சாலைகளில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினர் அறிவுறுத்திவருகின்றனர்.