திருப்பூரில் சமத்துவ பொங்கல்: இஸ்லாமியர்கள் உள்பட 300 பெண்கள் பங்கேற்பு - திருப்பூர் சாமுண்டிபுரத்தில் பொங்கல் விழா
திருப்பூர்: மதிமுக, திலிபன் மன்றம் சார்பாக திருப்பூர் சாமுண்டிபுரத்தில் 24ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்லாமியர்கள் உள்பட 300 பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதன் பிறகு, பெண்கள் அனைவரும் கும்மியடித்து பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.