ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு உற்சவமான எண்ணெய் காப்பு உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவத்தின்போது ஸ்ரீ ஆண்டாளுக்கு எண்ணையானது தாழம் பூ, மகிழம் பூ, வெட்டிவேர் உள்ளிட்ட மூலிகைகளால் தயார் செய்யப்பட்டு சாற்றுவது வழக்கம். தொடர்ந்து எட்டு நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் ஆறாம் திருநாளன்று கூடாரவல்லி என்ற நிகழ்ச்சி நடைபெறும்.