இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் குள்ள மூங்கில்! - குள்ள மூங்கில்
மலைகளில் மனிதனுக்குப் பயன் தரும் எண்ணற்ற பொருள்கள் உள்ளன. அவைகள் சரியாக பாதுகாக்கப்படாததால், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்களை இழந்து வருகிறோம். அப்படியான மலைப்பொருட்களில் ஒன்று ரிங்கல். மூங்கில் குடும்பத்தைச் சேர்ந்த ரிங்கல் உத்தரகாண்டில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. உத்தரகாண்டில் இதனை குள்ள மூங்கில் என்று அழைக்கின்றனர். கரோனா தொற்று காலத்தில் பணியை இழந்து வரும் இளைஞர்களுக்கு குள்ள மூங்கில் வேலைவாய்ப்பை வழங்குகிறது.