திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு படுத்துறங்கிய ஊழியர்கள்! - திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு படுத்துறங்கிய ஊழியர்கள்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 7ஆவது நாளாக சாலையில் படுத்துறங்கியும், மேளதாளம் முழங்க சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவைகளை திரும்ப தர வலியுறுத்தப்பட்டது. பின்பு நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிதுறுத்தப்பட்டன.