மைசூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்த யானைகள் - போக்குவரத்து பாதிப்பு - Mysore National Highway Erode
ஈரோடு: சத்தியமங்கலம் ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. அவைகள் அவ்வப்போது உணவு தேடி மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வருவது வழக்கம். அதேபோல இன்று குட்டியுடன் வந்த யானைகள் சாலையில் வெகுநேரம் நின்றன. அதனால் அங்கு ஒருமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.